சென்னை:
வதூறு வழக்கில் அண்ணாமலைக்கு நிச்சயமாக தண்டனை பெற்று தரப்படும் என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.

அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

பின்னர், சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை சொன்ன அவதூறு கருத்துக்களை திரும்ப பெற வேண்டும். அண்ணாமலை மன்னிப்பு கேட்காததால் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளோம். திமுக யார் மீதும் பொய் வழக்கு போடாது. நிச்சயமாக அண்ணாமலைக்கு தண்டனை பெற்று தரப்படும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை உறுதியாக கிடைக்கும். சட்ட ரீதியாக தற்போது வரை அண்ணாமலை எந்த பதிலும் அளிக்கவில்லை. திமுக தொடர்ந்த அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்றுள்ளது வரலாறு என்று கூறினார்.