சென்னை:
நாடு நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்வெளியானது.

சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் நேற்று (மே 11) வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று (12ம் தேதி) வெளியாகின. நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது.

மாணவர்களிடம் போட்டியை தவிர்க்க முதல் மூன்று இடங்களை மட்டும் குறிப்பிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

சென்னையில் 97.40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினார்கள்.

இந்த முடிவுகளை மாணவர்கள் www.cbse.nic.in , www.cbseresults.nic.in , www.cbseresults.gov.gov.in மற்றும் www.cbse.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.