சென்னை:
“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திறக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு, அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழக அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதனை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.