சமூக வலைதளங்களில், தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு தெரிவித்துள்ளது.

அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்ட 386 வீடியோக்களை தடை செய்ய யூடியூப்-க்கு பரிந்துரை செய்யப்பட்டு, 221 சட்டவிரோத கடன் செயலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel