புதுடில்லி:
போர் நடக்கும் சூடானில் இருந்து, ‘ஆப்பரேஷன் காவிரி’ திட்டத்தின் வாயிலாக, 135 இந்தியர்கள், ஐ.என்.எஸ்., கப்பல் வாயிலாக மீட்கப்பட்டனர்.

வட ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே, சமீபத்தில் மோதல் வெடித்தது. தலைநகர் கர்துாம் உட்பட பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதற்கிடையே, சூடானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்கும் திட்டத்திற்கு, ‘ஆப்பரேஷன் காவிரி’ என, மத்திய அரசு பெயர் வைத்துள்ளது.

இதன்படி, இந்தியர்களை மீட்கும் பணியில், நம் விமானப் படையின் இரண்டு விமானங்கள், சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலும், ஐ.என்.எஸ்., சுமேதா கப்பல், சூடான் துறைமுகத்திலும் நிலைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில் நேற்று, ‘ஆப்பரேஷன் காவிரி’ திட்டத்தின் வாயிலாக, முதற்கட்டமாக, 135 இந்தியர்கள் ஐ.என்.எஸ்., சுமேதா கப்பல் வாயிலாக, சூடான் துறைமுகத்தில் இருந்து, ஜெட்டா துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள், அங்கிருந்து விமானங்கள் வாயிலாக தாயகம் திரும்புவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.