டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு தொடர்பான செய்திகளை வெளியிட்ட 6 யூடியூப் சேனல்களை மத்தியஅரசு முடக்கி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி அரசு பொறுப்பேற்றது முதல் காலிஸ்தான்கள் ஆதரவாளர்களிடன் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பஞ்சாப்பில் காலிஸ்தான் கோஷங்கள் மீண்டும் உயிர்பெறத் தொடங்கி உள்ளன இதையொட்டி, பல யுடியூப் சேனல்களும் தொடங்கப்பட்டு காலிஸ்தான் ஆதரவு செய்திகள் வெளியாகி வந்தன. சமீபத்தில், காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் சிங் சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் அஜ்னாலா போலீஸ் நிலையத்தில் புகுந்து ரகளையில் இறங்கியது அங்கு பெரும் அதிர்வலைகளை ஏறபடுத்தியது.
இந்த நிலையில், காலிஸ்தான் ஆதரவு செய்திகளை வெளியிட்ட 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளன. வெளிநாடுகளில் இருந்து இயங்கி வந்த இந்த சேனல்கள் கடந்த 10 நாட்களாக முடக்கப்பட்டு இருப்பதாக மத்திய தகவல் ஒளிபரப்பு செயலாளர் அபூர்வா சந்திரா தெரிவித்தார்.
இதுதொடர்பாக மத்திய அரசு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த சேனல்களை யூடியூப் நிறுவனம் முடக்கியுள்ளது.