கோலாலம்பூர்: மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் அருள் கந்தா ஆகியோர் ‘1எம்டிபி’ எனப்படும் மலேசிய மேம்பாட்டுக் கழகம் குறித்த வழக்கு ஒன்றிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். mஅவருடன்
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப்ரசாக். இவர் கடந்த 2009-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதும் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார். அரசின் முதலீட்டு நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிதியை நஜீப் ரசாக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த ஊழல் குற்றச்சாட்டுதொடர்பாக, நஜீப் ரசாக் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மற்றும் 1எம்.டி.பி. நிறுவனத்தின் அதிகாரிகள் அருள்கந்தா உள்பட பலர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் 1எம்.டி.பி. ஊழல் தொடர்பான முதல் வழக்கில் நஜீப் ரசாக்குக்கு 12ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே 1எம்.டி.பி. ஊழல் தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையை மாற்றியமைக்க நஜீப் ரசாக், பிரதமர் மற்றும் நிதிமந்திரியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் நஜீப் ரசாக் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதரங்கள் இல்லை என கூறி அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.
மேலும் நஜீப்புக்கு உடந்தையாக இருந்ததாக கூட்டுக் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பு சாட்சியாக ஆஜரான 1எம்டிபி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான அருள் கந்தசாமியும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி முகமது ஸைனி மஸ்லான், 2016ல் தலைமைத் தணிக்கை அதிகாரியாக இருந்த அம்ப்ரின் புவாங்கின் சாட்சியம் குறித்து எடுத்துரைத்தார். வழக்கில் அரசாங்கத் தரப்பு ஆறாவது சாட்சியமாக அவரைச் சேர்த்திருந்தது. “தலைமைத் தணிக்கை அதிகாரி அவரது கடமையை ஆற்ற, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் வலுவான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. யாருக்கும் அஞ்சியோ சாதகமாகவோ செயல்பட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை,” என்று நீதிபதி ஸைனி குறிப்பிட்டார்.
திரு அம்ப்ரின் தமது கொள்கையில் தீவிரமானவர். நேர்மையாகச் செயல்படக்கூடியவர் என்பதை நீதிபதி சுட்டினார். அவர் சாட்சியம் அளிக்கையில் எந்த இடத்திலும் தடுமாறவில்லை என்றார் நீதிபதி.
‘1எம்டிபி’யின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா கந்தசாமி அளித்த கூடுதல் விவரங்களின் அடிப்படையில்தான் 2016ஆம் ஆண்டின் அறிக்கையில் திரு அம்ப்ரின் திருத்தங்கள் செய்ததாக நீதிபதி சொன்னார். ‘1எம்டிபி’ நிர்வாகம் சரியாக ஒத்துழைத்திருந்தால் திரு அருள் கந்தா கூடுதல் தகவல்களைப் பின்னர் வழங்க நேரிட்டிருக்காது என்றார் அவர்.
தம்மேல் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் திரு நஜிப்தான் தணிக்கை அறிக்கையில் திருத்தம் செய்யும்படி உத்தரவிட்டதாகக் கூறப்படுவதை நீதிபதி நிராகரித்தார். “அதன் தொடர்பில் எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை. அறிக்கையிலிருந்து நீக்கப்பட்ட தகவல்கள் திரு நஜிப் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள எவ்வாறு உதவின என்று அரசாங்கத் தரப்பு நிரூபிக்கவில்லை,” என்று நீதிபதி ஸைனி கூறினார்.
திரு நஜிப்பிற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட திரு அருள் கந்தாவும் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். திரு அருள் கந்தா விசாரணையில் உண்மையான தகவல்களைக் கூறினார் என்று உறுதியாகக் கூறிய நீதிபதி, அவரது சாட்சியம் திரு நஜிப்பிற்கு சாதகமாக அமைந்ததாகவும் குறிப்பிட்டார்.
அவர் முழுவதும் உண்மையைக் கூறவில்லை என்ற அரசாங்கத் தரப்பின் வாதத்தை நீதிபதி நிராகரித்தார். அருள் கந்தாமீது இது தொடர்பான குற்றச்சாட்டு மீண்டும் சுமத்தப்பட மாட்டாது என்பதற்கான உத்தரவாதமாக இது பார்க்கப்படுகிறது.