சென்னை:  மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் ரூ.38 கோடியில் சிசிடிவி கேமராக்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த கடந்த 2020ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அதன்படி, நாட்டில் காவல் நிலையங்கள், புலனாய்வு அமைப்புகள் சிபிஐ, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை போன்ற புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்கள், விசாரணைகளை நடத்தி கைது செய்யும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. மேற்குறிப்பிட்ட விசாரணை அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று கடந்த 2020 டிசம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் உத்தரவு  முழுமையாக செயல்படுத்தப்படாத நிலையில், கடந்த  23ந்தேதி நடைபெற்ற (பிப்ரவரி 23,  2023) விசாரணையின்போது, காவல்நிலையங்கள் உள்பட விசாரணை அமைப்புகள் உள்ள இடங்களில் கண்டிப்பாக காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும், இதை  ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை  ரூ.38 கோடியில் மேம்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,  மாநிலத்தில் உள்ள 1578 காவல் நிலையங்களில் 12-18 மாதம் வரை பதிவுகளை சேமிக்கும் வகையில், நவீன கேமராக்கள் பொருத்தும் பணி விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.