சென்னை: தேடி வந்து ஆதரவு கொடுத்த காலம் போய்; ஆதரவைத் தேடி ஓடுகிறார்களே? என தற்போதைய அதிமுகவின் நிலைமை குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வேதனை தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே பூங்குன்றன் சசிகலாவின் அரசியல் வருகை குறித்து, அவர் தியாக தலைவியா என கேள்வி எழுப்பியது பேசும்போருளானது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன் சங்கரலிங்கம். இவர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கட்ச பணிகளில் ஆர்வம் காட்டாம் ஒதுங்கி இருந்து வருகிறார். இருந்தாலும், அவ்போதும் கட்சியின் நடவடிக்கை குறித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகிறார். தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது முகநூல் பக்கத்தில் அதிமுக நிலை குறித்து பல்வேறு பதிவுகளை செய்து வருகிறார். அவரது பதிவுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், தற்போது அதிமுக பிளவு உள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கோரி கூட்டணி கட்சியான பாஜகவை பார்க்க காத்து கிடக்கும் நிலை குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவின் இரு அணியினரும் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், பாஜக தலைவரையும் சந்திக்க நேரம் கேட்டு, போட்டி போட்டு காத்துகிடந்து ஆதரவு கேட்டு வருவது குறித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.
கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை தான் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவிப்பது வழக்கம். ஆனால், இந்த இடைத்தேர்தல், அதிமுக பிளவு பட்டுள்ளதால், வழக்கத்தை மாற்றி, கூட்டணியின் தலைமையே சிறிய கட்சிகளிடம் கையேந்தும் நிலை உருவாகி உள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளதுடன், அதிமுகவுக்கு மானக்கேடு என சமூக வலைதளங்களல் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன் தனது முகநூல் பதிவில்; தேடி வந்து ஆதரவு கொடுத்த காலம் போய்; ஆதரவை தேடி ஓடுகிற காலம் வந்துவிட்டதே! என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சசிகலா தியாகத்தலைவியா? தியாகத்தின் அர்த்தம் தெரியுமா? ஜெ. உதவியாளர் பூங்குன்றன் விமர்சனம்…
சசிகலா வருகை எதிரொலி? அதிமுக தலைமைமீது கடுமையாக சாடிய ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்..