சென்னை: ஆளுநர் மாளிகையில்   நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆளும் திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் புறங்கணித்தன. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுக உள்பட பல பட்சிகள் பங்கேற்றன.

தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், கடந்த 7ந்தேதி நடைபெற்ற ஆளுநரின் உரையின்போது நடைபெற்ற சம்பவங்கள், அதைத்தொடர்ந்து ஆளுநரின் பொங்கல் அழைப்பு சர்ச்சையான நிலையில், ஆளுநர் மாளிகையில் நேற்று பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகளுடன்  சிறப்பாக நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிவாரம் கட்டப்பட்டு விமர்சையாக தொடங்கிய இந்த விழாவை , ஆளும் தி.மு.க-வும், அதன் கூட்டணி கட்சிகளும் முற்றிலும் புறக்கணித்துவிட்டன.

ஆனால்,  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுக ஆதரவு கட்சிகள், பாஜக மற்றும் சமூக ஆர்வலர்கள் சில பிரபலங்கள்,  அரசு உயரதிகாரிகளும்  என பலரும்  நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விழாவில் கலந்துகொண்ட இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினரி தனித்தனி குழுவாக வந்து கலந்துகொண்டனர்.

இதையடுத்து ஆளுநர் மாளிகையில்  பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வேஷ்டி, சட்டை, பரிவட்டம் கட்டி இருந்தார். அவரது மனைவி பட்டுப்புடவை அணிந்து பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.