சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவகாரங்களைத் தொடர்ந்து, டிவிட்டரில், #GetOutRavi டிரென்டிங்கனா நிலையில், தற்போது சென்னை முழுவதும் #GetOutRavi என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. கவர்னருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. வழக்கம்போல், ஆளுநர் உரையுடன் இந்த கூட்டம் தொடங்கிய நிலையில், ஆளுநர் தமிழில் உரையை தொடங்கினார். பின்னர் தமிழ்நாடு அரசால் கொடுக்கப்பட்ட உரையை சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து வாசித்தார். பின்னர், தமிழிலேயே தனது உரையை நிறைவு செய்தார். அவரது உரையின்போது திராவிடம், திராவிட மாடல் உள்பட மறைந்த தலைவர்களின் பெயர்களையும் வாசிக்காமல் விட்டுவிட்டார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசால் கொடுக்கப்பட்ட உரையில் சில வார்த்தைகளை தவிர்த்தும், சில வார்த்தைகளை சேர்த்தும் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, அவர் பேசிய உரை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனால் கோபமடைந்த கவர்னர், அவையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டிக்கும் வகையில் ட்விட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரென்ட் ஆனாது. இந்த நிலையில், இன்று போஸ்டர் வைரலாகி வருகிறது.
கவர்னரின் இந்தகைய செயலுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இந்த நிலையில் கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் செம்மொழி பூங்கா, அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் #GetOutRavi என்ற வாசகத்துடன் திமுக வைத்த பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. கவர்னர்- ஆளும் கட்சி மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு