சபரிமலை:
பரிமலையில் உடனடி முன்பதிவு முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூசைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சபரிமலை தரிசனத்தக்கு இணையதளத்தில் நாடு முழுவதும் இருந்து இதுவரை 21,71,452 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில் இதுவரை 19,38,452 பேர் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளனர்.

பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால், தரிசன நேரத்தை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பகல் 1 மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கும் நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 30 நாள்களில் 19.38 லட்சம் பக்தர்கள் சாமிதரிசனம் செய்துள்ளனர். அடுத்த இரு நாள்களும் வார இறுதி நாள்கள் என்பதால், பக்தர்கள் எண்ணிக்கை விரைவில் 20 லட்சத்தைத் தாண்டும் எனவும் தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், சபரிமலையில் உடனடி முன்பதிவு முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.