பெங்களூரு: நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனமான, ‘ரேபிடோ பைக் டாக்சி’யில் வந்த இளம்பெண்ணை, அந்த வண்டியின் டிரைவர் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அந்த பைக்கின் டிரைவரான சகாபுதீன் அவது நண்பர் அக்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கால் டாக்சி, கால் ஆட்டோ போல கால் பைக் டாக்சி சேவைகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சேவையை கர்நாடக மாநிலம் உள்பட பல நகரங்களில் ரேபிடோ எனப்படும் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், இளம்பெண் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, அங்கு நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டு, நன்றாக மது அருந்தியுள்ளார். பார்ட்டி முடிந்ததும், நள்ளிரவு நேரத்தில், தனியாக தான் தங்கியிருக்கும் அறைக்கு செல்லும் வகையில் ரேபிடோ பைக் டாக்சி புக் செய்துள்ளார். அதாவது பார்ட்டி நடைபெற்ற இடத்தில் இருந்து, நீலட்ரிநகரில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல ‘பைக் டாக்சி’யில் முன்பதிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த பெண்ணை அழைத்து செல்ல பைக் டாக்சி வந்துள்ளது. அந்த பைக்கின் டிரைவராக சகாபுதீன் (வயது 26) என்ற நபர் வந்துள்ளார். அந்த இளம்பெண்ணை பைக்கில் ஏற்றுக்கொண்டு பதிவு செய்த முகவரிக்கு அழைத்து சென்றபோது, அந்த பெண் மதுபோதையில் மயக்க நிலையில் இருந்தை தெரிந்துகொண்டு, அவரை பலாத்காரம் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து, தனது நண்பர்களுக்கு அழைப்பு விடுத்ததுடன், அந்த இளம்பெண்ணை தான் தங்கியுள்ள அறைக்கு அழைத்துச சென்றுள்ளார். அங்கு அவரது காதலி உதவியுடன், அவரும், அவரது நண்பர் அக்தர் (வயது 24) என்பவரும் மயக்க நிலையிலேயே அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
மது மயக்கத்தில் இருந்த அந்த பெண் அடுத்த நாள் முற்பகல் மயக்கம் தெளிவடைந்து எழுந்தபோதுதான், தான் எங்கே இருக்கிறேன் என்பதையே அறிந்து கொண்டுள்ளார். அங்கிருந்த இளம்பெண்ணிடம் இதுகுறித்து விசாரித்தபோது, நீங்கள் மதுபோதையில் இருந்ததால் உங்களை வீட்டில் விடாமல் இரவு எங்களுடன் உறங்க வைத்து நாங்கள் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த இளம்பெண்ணும் அங்கிருந்து வெளியேறி, தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
ஆனால், வீட்டிற்கு சென்றதும், அவருக்கு உடல்வலி மற்றும் ரத்துப்போக்க ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உடல்நல பரிசோதனை செய்தார். அந்த இளம்பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பதை கண்டுபிடித்தனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். மேலும், அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ‘பைக் டாக்சி’ டிரைவர் சகாபுதீன் அவரது நண்பர் அக்தர் மேலும் அந்த குற்றத்திற்கு உதவிய சகாபுதீனின் காதலி உள்பட 3 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட இளம்பெண் கேரள மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண் என்பதும், இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் எலெக்ட்ரானிக் சிட்டி பிடிஎம் லேஅவுட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கிராபிக் டிசைனராக பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ‘பைக் டாக்சி’ சேவை தொடங்க தமிழகஅரசு அழைப்பு! நிபந்தனைகள் அறிவிப்பு…