திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பெண்கள் வருவதில் முந்தைய நடைமுறையே தொடரும் என தேவசம் போர்டு விளக்கம் அளித்துள்ளது.
சபரிமலையில் 41நாள் மண்டல பூஜைக்கான கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்றுமுதல் பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜை நிறைவுபெறுகிறது. மண்டல பூஜையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி உள்ளது. ஏராளமானோர் சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.
இதற்கிடையில் சபரிமலையில் அய்யப்பன் பிரம்மச்சாரியாக இருப்பதால், அங்கு குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கின்போது, கடந்த 2018ம் ஆண்டு, வயது வேறுபாடு இல்லாமல் எல்லா வயதுப் பெண்களும் இந்தக் கோயிலுக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதித்து தொடர்ப்பட்ட வழக்கில் கோவிலுக்கு பெண்கள் அனுமதி,
மாதவிடாய் ஏற்படும் வயதினர் என்பதால், சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவjக தெரிவிக்கப்பட்டது. இருதுதொடர்பான வழக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வழிபாட்டுத் தலங்களில் பெண்கள் அனுமதிக்கப்படும் விவகாரம் இந்தக் கோயில் தொடர்புடையது மட்டுமல்ல. பெண்களை மசூதிகளில் அனுமதிப்பதையும் உள்ளடக்கியது என்று கூறப்பட்டது. மேலும் 7 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, சபரிமலையில், ஏற்கனவே கடைபிடிக்கப்பட்ட நடைமுறையே தொடர்ந்து வருகிறது. அதன்படி, 10வயதுவரை உள்ள பெண் குழந்தைகளும், 50வயதுக்கு மேல் உள்ள முதிய பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தேவசம் போர்டு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறை களில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தேவசம் போர்டு விளக்கம் அளித்துள்ளது. அதில், சபரிமலையில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும் என்றும், 10வயதுக்கு கீழும், 50வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளதுடன், வழிகாட்டு நெறிமுறை தவறுதலாக அச்சிடப்பட்டு உள்ளதாகவும் கேரள அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுபற்றி விளக்கம் அளித்து ஏ.டி.ஜி.பி அஜித்குமார், “முந்தைய வருடத்தில் அச்சிடப்பட்ட கையேடு இந்த முறை வழங்கப்பட்டுவிட்டது. அதில் நிறையத் தவறுகள் உள்ளன. டி.ஜி.பி அறிவுறுத்தல்படி பழைய கையேடுகள் திரும்பப்பெறப்பட்டு, தவறுகள் நீக்கப்பட்ட புதிய அறிவுறுத்தல் கையேடு வழங்கப்படும்” என்றார்.
கார்த்திகை முதல்நாளே சபரிமலை தரிசனம் குறித்த விவாதம் எழுந்ததை அடுத்து சன்னிதானத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேரள தேவசம்போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், “சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி என்ற அறிவுறுத்தல் திரும்பப்பெறப்படும். அரசுக்கும், தேவசம்போர்டுக்கும் எந்தத் தவறான நோக்கமும் இல்லை. ஏற்கெனவே உள்ள நடைமுறை தொடரும்” என்றார்.
41நாள் மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது …