பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவத்-துக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

மும்பை புறநகர் பகுதியான கோரிகோனில் குடியிருப்பு கட்டியதில் பணமோசடி செய்ததாக மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரவத் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

மோசடியில் சஞ்சய் ரவத்-துக்கும் பங்கு இருப்பதாக கூறிய அமலாக்கத்துறை அவர் திரைமறைவில் இருந்து செயல்பட்டதாக குற்றம்சாட்டியது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் அவரை கைது செய்த அமலாக்கத்துறை அவரை மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைத்தது.

இந்த நிலையில் அரசியல் காரணங்களுக்காக அமலாக்கத்துறை தன் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறிவருவதாக சஞ்சய் ரவத் ஜாமீன் மனு செய்தார்.

இதில் மும்பை முதன்மை நீதிமன்றம் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கியது.