சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னை  மாநகராட்சியில் மழையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்கும் வண்ணம் பிரத்யேக எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின்வெட்டு, மின் கசிவு போன்ற புகார்களுக்கு உதவி எண் அறிவிப்பு  வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகரில் கழிவுநீர் அகற்றம் மற்றும் குடிநீர் வழங்கல் தொடர்பாக புகார்களுக்கு குடிநீர் வாரியத்தின் புகார் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 044 45674567 (20 லைன்கள்) எண்ணை தொடர்புகொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1916 எண்ணை தொடர்புகொண்டும் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் நேற்று இரவு முதல் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது.  பல்வேறு இடங்களில் சாலைகளில்  தேங்கிய மழைநீர் இரவோடு இரவாக அகற்றப்பட்டது.  மேயர் உள்பட அதிகாரிகள் களத்தில் இறங்கி மழைநீர் வடிகால் பணிகளை கண்காணித்து வருகின்றனர். இது மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில்,  கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல், குடிநீருடன் கழிவுநீர் கலப்பது உள்ளிட்டவை தொடர்பான புகார்களுக்கு பிரத்யேக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னைவாசிகள் மேற்குறிப்பிட்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சபாஷ் மாநகராட்சி: கொட்டும் மழையிலும் மழைநீர் அகற்றும் பணியில் இரவோடு இரவாக களமிறங்கிய மேயர் பிரியா…