சென்னை: தமிழ்நாட்டில் புதிய போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், சென்னையில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.42 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
சாலை விபத்துக்களை தடுக்க மத்தியஅரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்த புதிய விதிகளின்படி, விதிகளை மீறுவோருக்கு ரூ.1000 முதல் 10ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு கடந்த 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து போக்குவரத்து காவலர்கள் ஆங்காங்கே நின்றுகொண்டு வாகனங்களை மடக்கி அபராதங்களை வசூலித்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இநத் நிலையில், சென்னையில் மட்டும் கடந்த 3 நாட்களில் மட்டும் 6,187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.42 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத்துறை காவல்துறை தெரிவித்துள்ளது.