தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வணிகர்கள் என பலரும் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் வியாபாரிகள் சங்கம் விடுமுறை அளிக்க முடிவெடுத்துள்ளது.

இதனால் சென்னை நகரின் பிற இடங்களில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் காய்கறி கிடைப்பதில் சிரமம் இருக்கும் என்று கூறப்படுகிறது.