சென்னை: மருத்துவப் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 565 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை  அமைச்சர்  மா.சுப்பிரமணியன் கூறினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான  7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 565 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது; அவர்களுக்கு மருத்துவ பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணினிகள் வழங்கப்படும் என கூறினார்.

மேலும், , தமிழக மக்களின் வரி பணத்தில் செயல்படும் அரசு மருத்துவமனையில், மக்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். 4 சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முதல் உதவி பெட்டி வழங்கப்பட்டுள்ளது; சாலைகளில் திடீரென விபத்து ஏற்பட்டால் மக்களுக்கு உதவ முதல் உதவி பெட்டி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.