சென்னை: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி ரெயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட நிலையில், அதனால் சோகமடைந்த மாணவியின் தந்தை விஷம் குடித்து தற்கொலை கொண்டார். இதனால், சோகத்தில் தத்தளிக்கும் அந்த குடும்பத்தினரை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ஓடும் ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது விசாரணையில், இருவரும் ஒரே பகுதியில் வசித்து வருவதுடன், அவர்கள் குடும்பத்தினர் காவல்துறையில் பணியாற்றியவர்கள் என்றும் கூறப்பட்டது. மாணவி கொலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவரின் அப்பா மாணிக்கம் என்பவர் மதுவில் விஷம் கலந்துகுடித்து தற்கொலை செய்துகொண்டார். இது அந்த பகுதியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியதுடன், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், சென்னை மாநக காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இன்று காலை ரெயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்தியப்பிரியா இல்லத்திற்கு சென்று, மாணவியின் தாய் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.