சேட்டை பட இயக்குனர் ஆர். கண்ணனின் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.

மசாலா பிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மெட்ரோ படம் மூலம் அறிமுகமான ஷிரிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

காமெடி த்ரில்லர் படமான இந்த படம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், யோகி பாபு ஆகியோரை வைத்து ‘காசேதான் கடவுளடா’ படத்தின் ரீமேக்கை சமீபத்தில் முடித்திருக்கிறார் இயக்குனர் ஆர். கண்ணன்.

இதனைத் தொடர்ந்து புதிய பட வேலையில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்.