திருவனந்தபுரம்: பிஎஸ்ஐ அமைப்புக்கு மத்தியஅரசு 5ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில், அந்த அமைப்புடன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 873 போலீசாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக என்.ஐ.ஏ. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும்  பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறி, பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்தியஅரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட பிஎப்ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் அதிக அளவிலான பிஎப்ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதுடன் ஏராளமான ஆவணங்களும் பணமும் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, பிஎப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருடன் 873 போலீசாருக்கு தொடர்பு இருப்பதாக என்ஐஏ அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டு உள்ளத. இதுதொடர்பாக, என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை ஸ்ரீ கேரளா மாநில காவல்துறை தலைவரான  டி.ஜி.பி.க்கு அளித்துள்ள அறிக்கையில், மொத்தம் 873 காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது என்றும், இதில்  காவல் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் வரை உள்ள காவல்துறையினர் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பட்டியலில் இடம்பெற்றுள்ள காவல்துறை அதிகாரிகள் அனைவரிடமும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. மேலும், அவர்களின் வங்கிக்கணக்கு விவரங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். இந்த 873 அதிகாரிகளும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளுக்கு முக்கிய தகவல்களை அளித்து வந்ததாகவும் என்.ஐ.ஏ. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பு அந்த மாநில காவல்துறையில் நிலவியுள்ளது.