டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

வெள்ளியன்று மாலை 80.99 ரூபாயாக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் 81.52 ரூபாயாக சரிந்தது.

ரூ. 81.50 அளவிலேயே இருந்து வரும் நிலையில் விரைவில் 82 ரூபாய் அளவுக்கு செல்லும் என்று வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் பண மதிப்பை ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு அந்தளவுக்கு சரியவில்லை என்று இறுதினங்களுக்கு முன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

மேலும், ரூபாயின் மதிப்பு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று மீண்டும் சரிவை சந்தித்திருப்பதை அடுத்து இறக்குமதியாளர்கள் பலருக்கு கவலையளித்துள்ளது.