சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே கள்ளச்சந்தையில் மதுவிற்பனை தொடர்பாக, அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திமுக கவுன்சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, திமுக கவுன்சிலர் தலை, கழுத்த உள்பட பல இடங்களில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த மது விற்பனையை லோகேஸ்வரி எனப்படும் எஸ்தர் என்ற நடுத்தர வயது பெண்மணி செய்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கும் அந்த பகுதியில் உள்ள பல அரசியல் பிரமுகர் களுக்கும் தொடர்பு உள்ளதாக தெரிகிறது. லோகேஸ்வரி ஏற்கனவே விபச்சார வழக்கிலும், தனது கணவரை கொலை செய்தது தொடர்பான வழக்கிலும் தொடர்புடையவர்.
இவருக்கும், அந்த பகுதியில் உள்ள திமுக கவுன்சிலருக்கும் இடையே இதுதொடர்பாக சர்ச்சை இருந்துள்ளது. சதீஷ் நடுவீரப்பட்டு ஊராட்சியில் ஏழாவது வார்டு உறுப்பினராக உள்ளார். இவர் கவுன்சிலரானதும் தனது எஸ்தரிடம் அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டியதாக கூறப்படுசிகறது. ஆனால், அதை எஸ்தர் கண்டு கொள்ளாத நிலையில், இதுதொடர்பாக சதீஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.
சம்பவத்தன்று, எஸ்தர் சதீஷை தன் வீட்டிற்கு வரவழைத்து பேசிக்கொண்டிருந்தவர், திடீரென அவரது தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டி கேட்டிற்கு வெளியே கொண்டு வந்து போட்டுவிட்டு வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சோமங்கலம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட் சதீஷ் திருமணம் ஆகாதவர். அவருக்கும் எஸ்தருக்கும் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும், எஸ்தரை பிடிபட்டால் மட்டுமே, இந்த கொலைக்கான உண்மை தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.