மதுரை: நீட் தேர்வால் எஸ்சி, எஸ்.டி, பழங்குடி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றன என மத்தியஅமைச்சர் அத்வாலே தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் நேச்சுரோபதி மற்றும் யோகா மத்திய பல்கலைக்கழகம் அமைக்கவும், தேசிய யோகா மற்றும் நேச்சுரோபதி கவுன்சில் அமைக்கவும் ஆயுஷ் அமைச்சகத்திடம் வலியுறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  அண்டை மாநிலமான கேரளா ஆயுர்வேத கேஃபிட் ஸ்க்ரீன் துறையில் பெயர் பெற்றுள்ளது போல, யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான துறையில் தமிழ்நாடு பெயரை உருவாக்க வேண்டும்  என்று அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற தேசிய இயற்கை மற்றும் யோகா மருத்துவம் தொடர்பாக 3 நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. நேற்றைய இறுதி மாநாட்டில்,  மத்திய இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கொல்லிமலை போன்ற மூலிகை சார்ந்த பகுதியாக நாமக்கல் இருப்பதால், மருத்துவ சுற்றுலா துறையில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் நேச்சுரோபதி மற்றும் யோகா மத்திய பல்கலைக்கழகம் அமைக்கவும், தேசிய யோகா மற்றும் நேச்சுரோபதி கவுன்சில் அமைக்கவும் ஆயுஷ் அமைச்சகத்திடம் வலியுறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், “பாரம்பரிய அறிவியல் ஆரோக்கிய அணுகுமுறைகளான யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான தேவைகள் தற்போது உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிகளில் இயற்கை மருத்துவ தேவைகளுக்கு சிறந்த அங்காடி கூடமாகும். அப்பகுதியை சேர்ந்த மக்கள் இயற்கை மருத்துவத்தையே மேற்கொண்டு வருகின்றனர்.” மேலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை அமைக்க கூடிய சாத்திய கூறு அறிக்கைகளை ஆய்வு செய்து நாமக்கல் மற்றும் அண்டை பகுதிகளை மருத்துவ சுற்றுலா மண்டலமாக மேம்படுத்த சுற்றுலா அமைச்சகத்திற்கு முன்மொழிவோம் எனவும்,  அண்டை மாநிலமான கேரளா ஆயுர்வேத கேஃபிட் ஸ்க்ரீன் துறையில் பெயர் பெற்றுள்ளது போல, யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான துறையில் நீங்கள் பெயரை உருவாக்க வேண்டும் என மாணவர்களிடம் உரையாற்றினார்.

இதையடுத்து இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நீட் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும்போது, நீட் தேர்வு முறையால் எஸ்சி, எஸ்டி, பழங்குடி மக்களுக்கான கோட்டாவில் பாதிப்பு ஏற்படுதாக தெரிவித்தவர், எம்பிபிஎஸ் போன்ற படிப்புகளை படிக்க தகுதி உடையவர்ளே நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.