கள்ளக்குறிச்சி: மாணவி மரணம் தொடர்பாக வன்முறையாளர்களால் தீவைத்தும் அடித்தும் நொறுக்கப்பட்ட தனியார் பள்ளி சீரமைப்பு பணி சுமார் 68 நாட்களுக்க பிறகு இன்று தொடங்கி உள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளி வளாகத்தில் நடந்த கலவரத்தில் ரூ. 3.45 கோடி மதிப்பில் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும், பெற்றோர்களும் பள்ளியை திறக்க வலியுறுத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து. விசாரணையின்போது, பள்ளியின் சேதம் குறிதுத விசாரணை அதிகாரி மதிப்பீடு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில், பள்ளி வளாகத்தில் இருந்த 51 தனியார் வாகனங்கள், போலீஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கான சேதம் ரூ.95.46 லட்சம் என்றும், கம்ப்யூட்டர் உள்ளிட்ட இதர பொருட்கள் சேதம் ரூ.1.50 கோடி என்றும், பள்ளி வளாகத்தில் இருந்த மரங்களுக்கான சேதம் ரூ. 1.27 லட்சம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இதுபோல சிசிடிவி கேமிராக்கள் சேதம், கதவுகள், சோலார் சிஸ்டம் போன்ற அனைத்தையும் சேர்த்து பள்ளியில் ஏற்பட்ட சேத மதிப்பீடு ரூ.3 கோடியே 45 லட்சத்து 26 ஆயிரத்து 297 ஆக கணக்கிடப்பட்டு உள்ளது.
இதுதவிர 68-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விரைந்து தாக்கல் செய்ய வேண்டும், என அறிவுறுத்தி விசாரணையை வரும் செப்.27-க்கு தள்ளி வைத்துள்ளார். அத்துடன், வழக்கை விசாரித்த நீதிபதி, கனியாமுர் பள்ளியை திறப்பது தொடர்பாக 10 நாட்களில் முடிவுவெடுத்து அறிவிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, பள்ளியை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்றுமுதல் பள்ளி சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் 68 நாட்களுக்கு பிறகு இன்று சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளன.