சென்னை:  அடமான கடன்களுக்கான ஆவணங்களை இணையதளம் மூலம் பதிவு செய்யும் வசதியை  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டம் பொதுமக்களுக்கு வரபிரசாதமாக அமைந்துள்ளது. இடைத்தரர்களின் தொல்லையில் இருந்து பொதுமக்களை காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இன்றைய நவீன காலக்கட்டத்தில் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள், தங்களுக்கென சொந்த வீடு தேவை என்பதை தங்களது லட்சியமாகவே கொண்டு பணியாற்றி வருகின்றனர். அதுபோல பலர் வர்த்தகம் செய்யவும், தொழில்களை விரிவாக்கவும், பணத்தேவைகளுக்கு, வங்கிகள், நிதி நிறுவனங்களையே சார்ந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

சிறுகுறு தொழில்கள் தொடங்கவும், தொழில்களை விரிவாக்கவும், வீடுகள், வீட்டு மனை விற்பனை, வீட்டு விரிவாக்கம்  போன்றவற்றுக்கு மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்பின்படி, பொதுத்துறை வங்கிகள், கோவாபரேடிவ்  வங்கிகள் கடன்களை வழங்கி வருகின்றன. ஆனால், இந்த கடன்களை பெறுவது அவ்வளவு எளிதானது கிடையாது.

நாம் வாங்கும் பணத்திற்கு ஏற்றவாறு கொலட்ரால் எனப்படும், சாட்சிகள், ஆதாரங்கள் தேவைப்படுகிறது. (கொலட்ரால் எனப்படும்  செக்யூரிட்டி கொடுக்க வேண்டும்) அதாவது , நாம் வாங்கும் கடனுக்கு ஏற்ற மதிப்பில், சொத்துக்கள் உள்ள பத்திரம் அடமானமாக வைக்கப்பட வேண்டும். பின்னர் இந்த சொத்துக்களை ஆய்வு செய்து அதிகாரிகள், இவ்வளவுதான் கடன்தர முடியும் என்று தெரிவிப்பது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. அதன்பிறகே, வங்கிகளுக்கும், கடன்வாங்கும் பொதுமக்களுக்கும் இடையே கடனுக்கான ஒப்பந்தம் சார்பதிவாளர் அலுவலகத்தில் போட முடியும். அதன்பிறகே, வங்கிகள் கொடுக்கும் கடன், நமது வங்கிக் கணக்குக்கு வரும்

ஆனால், இந்த செயல்கள் முடிய குறைந்த பட்சம் 15 நாட்கள் முதல் சில மாதங்கள் வரை ஆகலாம். இதில் பல இடையூறுகளும், இடைத்தரகர்களும் செயல்பட்டு வருகின்றனர். அவர்களை மீறி நாம் செல்ல முடியாத நிலை உருவாகி இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அதிப்பட்டு வருகின்றனர். வாங்கும் கடனில் ஒரு பகுதியை இடைத்தரகர்களுக்கும், சில அதிகாரிகளுக்கும் கமிஷனாகவே கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

இதுபோன்ற பிரச்சினைகளில், பொதுமக்கள் விடுபடும் வகையிலும், இடைத்தரகர்களிடம் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் நோக்கிலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருமையான புதிய திட்டத்தை தொடங்கி உள்ளார். 

சென்னையில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உரிமைப் பத்திரம் மற்றும் சமமான அடமானம் (MoD) டெபாசிட் மெமோராண்டம் பதிவு செய்வதற்கான ஆன்லைன் வசதியை ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

பொதுமக்கள், தொழில் நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்த திட்டத்தின்படி, இனிமேல், ஆன்லைன் மூலம் அடமானம் தொடர்பான ஆவணங்களை பதிவு செய்ய முடியும். இதனால்,  வங்கி மேலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர், தங்களது ஆவணங்களை பதிவு செய்ய  துணைப்பதிவாளர் அலுவலகம் வர தேவையில்லை. பொதுமக்கள், அதிகாரிகளின்  நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும், இடைத்தரர் களின் ஆதிக்கத்தை அடியோடு வேரறுக்கும் வகையிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதுபோல, கடன் பத்திரங்களை ரத்து செய்யவும், இந்த இணையதளம் வசதி உதவுகிறது. 

முதல்வர் ஸ்டாலினின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக, தமிழ்நாட்டில்,  ஒவ்வொரு ஆண்டும் 6.5 லட்சம் தொழில்முனைவோர் மற்றும் வீட்டுக் கடன் மற்றும் விவசாயக் கடன் பெறுபவர்கள் இடைத்தரகர்கள் தொல்லையின்றி பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அடமான கடன் என்றால் என்ன?

அடமான கடன்கள் என்பது  பாதுகாக்கப்பட்ட கடன்கள் வகையை சேர்ந்தது. அதாவது, கடன் பெறுபவர் கடன் வழங்குபவரிடம் ஒரு சொத்தை அடமானம் செய்து அதற்கீடாக கடன் பெறுகிறார்.வ ட்டி உள்ளிட்ட முழு கடன் தொகை திரும்ப செலுத்தப்படும் வரை கடன் வழங்குபவர் அந்த இணை-அடைமானத்தை தனது பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறார். இக்கடன் சமன்படுத்தப்பட்ட மாத தவணைகள் அல்லது EMIக்கள் முறையில் திரும்ப செலுத்தப்படுகிறது.  அடமான கடன்கள் வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.

கடன் வழங்குபவர் உங்களுக்கு ஒரு தொகையை கடனாக வழங்கி அதற்கு வட்டி வசூலிப்பார். நீங்கள் கடனை எளிய தவணைகளில் திரும்ப செலுத்துவீர்கள். உங்கள் சொத்துதான் உங்கள் கடனுக்கான உத்தரவாதம். இது நீங்கள் கடனை முழுமையாக திரும்ப செலுத்தும் வரை அது கடன் வழங்குபவரின் பாதுகாப்பில் இருக்கும். கடன் காலம் முழுவதும் கடன் வழங்குபவர் அந்த சொத்தின் மீது சட்டபூர்வமாக உரிமை கொண்டாடுவார். எனவே நீங்கள் கடனை திரும்ப செலுத்த தவறினால் அவர் அந்த சொத்தை பறிமுதல் செய்து அதை ஏலத்திற்கு விடும் உரிமையை படைத்திருப்பார்.

இத்தகைய அடமானத்தில் கடன் பெறுபவர் தான் கடனை உரிய காலத்தில் திரும்ப செலுத்தத் தவறும் பட்சத்தில் கடன் வழங்குபவர் அடமான சொத்தை எவருக்கேனும் விற்று தனது கடனை மீட்டுக்கொள்ளலாம் என்ற ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவார். அப்போது, கடன்வழங்குபவர் கடன் பெறுபவர் கடனை திரும்ப செலுத்துவது தொடர்பாக பின்பற்ற வேண்டிய ஒரு சில நிபந்தனைகளை முன்வைக்கலாம். இது மாத தவணைகள் செலுத்தப்படுவதில் தாமதம், தவணை செலுத்த தவறியதால் ஏற்பட்ட வட்டி விகித ஏற்றம், மற்றும் பல நிபந்தனைகளின் அடிப்படையில் சொத்து விற்கப்படும் போன்ற நிபந்தனைகளை உள்ளடக்கும்.

இதுதொடர்பாக   ஒப்பந்தம் ஒரு வங்கி மற்றும் கடன் பெறுபவருக்கு இடையே ஒப்பந்த நிபந்தனைகளை அமைக்கிறது. குறிக்கப்பட்டவுடன் கடன் பெறுபவர் நிதிக்கான அணுகலை பெறுகிறார். இத்தகைய ஒப்பந்தம் கடன் பெறுபவர் தனது கடன் தவணைகளை செலுத்த தவறினால் கடன் வழங்குபவருக்கு விற்கப்படும் சொத்தை கோரும் உரிமையையும் வழங்குகிறது.