சென்னை :
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசு செயலர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் காலை பத்து மணிக்கு நடக்க உள்ள கூட்டத்தில், தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் அனைத்து துறை செயலர்கள் பங்கேற்க உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு துறையிலும் நடந்து வரும் பணிகள், அவற்றின் தற்போதைய நிலை, செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.
அத்துடன், அரசின் முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது, வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
Patrikai.com official YouTube Channel