சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெற உள்ளது.  முதற்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது.  கலந்தாய்வை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் பொன்மு,  அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு  11,750 பொறியியல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்,  23,371 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பொறியியல் படிக்க விண்ணப்பித்த 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்று 7 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இடம் பிடித்தவர்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு, கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தொடங்கி வரும் 23-ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது. 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு அக்டோபர் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலும், நான்காம் கட்ட கலந்தாய்வு அக்டோபர் 29-ம் முதல் 31-ம் தேதி வரையிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தாண்டு முதன்முறையாக கலந்தாய்வில் இடங்களைத்தேர்வு செய்யும் மாணவர்கள் 7 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தி கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, அரசு பள்ளி மாணவர்களுக்கு  தமிழக அரசு ஒதுக்கிய 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் படி 11,750 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால்,  அதில் சேர 23,371 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என கூறினார்.