கன்னியாகுமரி:
பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை செப்டம்பர் 7ந்தேதி அன்று மாலை கன்னியாகுமரி காந்தி மண்டத்தில் இருந்து தொடங்கிய நிலையில், இன்று ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொள்ளும் இடங்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல்காந்தி மேற்கொள்கிறார். அதன்படி குமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாட்கள் 12 மாநிலங்கள் வழியாக 3570 கி.மீ. நடைபயணம் மேற்காள்கிறார். இந்த நடைபயணம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், அரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாகக் காஷ்மீரைச் சென்றடைகிறது.

இன்று காலை முளகுமூடு-இல் இருந்து ராகுல் நடைபயணத்தை தொடங்கி உள்ளார். அவரது இன்றைய நடைபயணம் குறித்த தகவல் வெளியிடப்பட்டஉள்ளது. ராகுலுடன் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர்.

காலை 7மணி: முளகுமூடு-இல் இருந்து 3வது நாள் பாதயாத்திரை தொடக்கம்

காலை 10 மணி: நேசமணி மெமோரியல் கிறிஸ்டியன் கல்லூரி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி

மாலை 4.00 மணி: மீண்டும் பாதயாத்திரை தொடக்கம்

இரவு 7.00 மணி: சாமுவேல் எல்எம்எஸ் எச்ஆர் நொடி பள்ளி, செருவரகோணம், பாரசலா, திருவனந்தபுரம்.