சென்னை: குவைத்துக்கு 1.377 கிலோ ஹெராயின் கடத்த முயன்ற நபர் மீதான சிறை தண்டனை மற்றும் அபராதத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடியாக ரத்து செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ,இவர் அதிமுக பொதுக்குழு வழக்கிலும் ஒபிஎஸ்.க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் இருந்து குவைத்துக்கு ஹெராயின் போதைபொருள் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்மீதான விசாரணை முடிவடைந்து, அவருக்கு 10ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ.1 லட்சம் அபராதமும் கீழ்கோர்ட்டு விதித்திருந்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து குற்றம் சாட்ட நபர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. பல்வேறு கட்ட விசாரணை முடிவடைந்து, நீதிபதி ஜெயச்சந்திரன் அதிரடியாக, குற்றவாளி மீதான சிறை தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்துள்ளார். விசாரணையின்போது, குற்றவாளி குவைத்துக்கு அனுப்ப முயற்சித்தது, தனக்கு ஹெராயின் என்பது தனக்கு தெரியாது என்றும், அது கோதுமை மாவு என்று கருதிதான் அனுப்ப முயற்சித்ததாகவும் தெரிவித்தார். குற்றவாளியின் வாக்குமூலத்தை ஏற்று, அவருக்கு கீழ்கோர்ட்டு விதித்த சிறை தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதியின் இந்த தீர்ப்பு சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இதே நீதிபதிதான், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், முறையாக விசாரணை நடத்தாமல், ஓபிஎஸ்-க்கு ஆதரவாக, எடப்பாடி கூட்டிய பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வழங்கினார். பின்னர் அவரது தீர்ப்பு உயர்நீதிமன்ற அமர்வால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.