பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இணைந்து பங்கேற்ற சினிமா நிகழ்ச்சி்க்கு இந்தப் படத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் கலந்துகொண்டனர்.

வழக்கமான மணிரத்தினம் படமாக இல்லாமல் மாறுபட்ட வரலாற்று புனைவை இயக்கி இருக்கிறார் மணிரத்தினம்.

ஏகப்பட்ட பொருட்செலவில் இந்த ஆண்டின் மெகா பட்ஜெட் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

ரஹ்மானின் மிரட்டல் இசையில் வெளியாகி இருக்கும் பிரம்மாண்ட டிரெய்லர் இதுவரை சுமார் 50 லட்சம் வியூஸ்-களை கடந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் ஒரு சாமானிய ரசிகனைப் போல் இந்தப் படத்தின் ரிலீசுக்காக தானும் காத்திருப்பதாகக் கூறினார்.

பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் இந்த மாதம் 30 ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.