ஸ்ரீபெரும்புதுார்:
ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ் நினைவிடத்தில் இன்று ராகுல் காந்தி மரியாதை செலுத்துகிறார்.

ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,570 கிலோ மீட்டர் யாத்திரையை இன்று மாலை, நான்கு மணிக்கு துவங்குகிறார். இதற்காக நேற்று இரவு சென்னை வந்தார். யாத்திரையை துவங்குவதற்கு முன், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவகத்திற்கு சென்று இன்று மாரியாதை செலுத்துகிறார்.
இன்று காலை, 6.45 மணியளவில் ராஜிவ் நினைவகத்திற்கு வரும் ராகுல், ராஜிவ் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்துகிறார்.
Patrikai.com official YouTube Channel