டெல்லி: கடந்த நான்கு நாட்களில் 1,293 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தெரிவித்து உள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யுயு லலித் கடந்த ஆகஸ்ஸ்டு மாதம் 28ந்தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியான யுயு லலித்துக்கு  ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  பொறுப்பேற்ற பின் பல முக்கிய வழக்குகளை விசாரிக்க 2 அரசியல் சாசன அமர்வகள் உள்பட  16 அமர்வுகள் உருவாக்கப்பட்டன.

அரசியல் சாசன அமர்வுகள் வாரத்தில் 3 நாள் விசாரணை நடத்தும் என்றும், ஒவ்வொரு அமர்வும் ஒரு நாளைக்கு 50 முதல் 69 வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் பொதுச் செயலாளரால் வழங்கப்பட்ட நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்வு விகிதத்தை கடந்த நான்கு நாட்களில் தலைமை நீதிபதி பகிர்ந்து கொண்டார். அதில்,   கடந்த  நான்கு நாட்களில் 1293 இதர வழக்குகளை உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்துள்ளது என்று   தலைமை நீதிபதி லலித் தெரிவித்துள்ளார். இதில், 106 வழக்கமான வழக்குகள் மற்றும் 440 இடமாற்ற மனுக்களும் அடங்கும் என்று  தெரிவித்து உள்ளார்.