சென்னை:
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணமாகிறார்.

கேரளாவின் திருவனந்தபுரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், நாளை தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது.
இதில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை பதினொரு மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில், திருவனந்தபுரம் செல்கிறார். மதியம் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்கிறார்.
இன்று மாலை கேரள அரசு சார்பில் நடக்கும் கலை, இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், இரவு ஏழு மணிக்கு விமானத்தில் சென்னை திரும்ப உள்ளார்.
Patrikai.com official YouTube Channel