மாஸ்கோ: சோவியத் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மைக்கேல் கோர்பசேவ் காலமானார்.
92 வயதாகும் சோவியத் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மைக்கேல் கோர்பச்சேவ் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன்னிறி மரணம் அடைந்தார். சோவியத் ரஷ்யவில் நிகழ்ந்து வந்த ஒன்றிங்களுக்கான பனிப்போரை முடித்து நோபல் பரிசு வென்ற சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் கோர்பச்சேவ்.
இவர் 1985 முதல் 91 வரை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த அவர் தமது 1990 முதல் 91 வரையிலான ஆட்சிக் காலத்தில் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து ரஷ்யாவை புதிய பாதையில் திருப்பி விட்டார்.
சோவியத்தின் கடைசி தலைவர் என்றும் அழைக்கப்படும் கார்ப்பசேவ், மறைந்த முன்னாள் அதிபர் ஸ்டாலினின் இரும்புத் திரைகளை நீக்கியதாக புகழ் பெற்றவர். அதே வேளையில், சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்ததாகவும் விமர்சிக்கப்பட்டார்.