டெல்லி: பிரபல பொருளாதார நிபுணர் அபிஜித் சென் காலமானார். அவருக்கு வயது 72.
பிரபல பொருளாதார நிபுணரும், முன்னாள் திட்டக்குழு உறுப்பினருமான அபிஜித் சென் (வயது 72) வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். நேற்று இரவு 11 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், நாங்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், ஆனால் நாங்கள் அங்கு செல்வதற்குள் எல்லாம் முடிந்து விட்டது” என்று அவரது சகோதரர் டாக்டர் பிரனாப் சென் கூறினார்.
அபிஜித் சென் 2010ல் பொதுச் சேவைக்காக பத்ம பூசண் விருது பெற்றுள்ளார். நாட்டின் பிரதமராக மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது அபிஜித் சென் 2004 முதல் 2014 வரை திட்டக்குழு உறுப்பினராக அபிஜித் சென் பதவி வகித்தார்.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 40 ஆண்டுகளாக பொருளாதார பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.