புதுடெல்லி:
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 21-ம் தேதி முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்று, தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 1-ம் தேதி வெளியானது.

இதையடுத்து, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்க இருந்தது.

இதற்கிடையே, இந்த கலந்தாய்வை நிறுத்திவைக்க வேண்டும் உச்ச ந நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அமர்வு, நீட் முதுநிலை கலந்தாய்வுக்குத் தடையில்லை. என கூறியது.

இந்நிலையில், மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என்றும், விண்ணப்பதாரர்களின் நலனுக்காக கவுன்சிலிங்கில் அதிக இடங்களைச் சேர்க்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.