புதுச்சேரி:
காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் புதுச்சேரி வந்தார்.
மேலும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் மாற்றக்கோரி கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியாதல் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஆலோசனை கூட்டத்திலிருந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி பாதியில் வெளியேறினார்.
இந்நிலையில், மாநில தலைவர் வாகனத்தில் ஏறிப் புறப்பட முயன்ற மேலிடப் பொறுப்பாளரைக் கட்சியினர் போக விடாமல் அவரது வாகனத்தை முற்றுகையிட்டு அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால், காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Patrikai.com official YouTube Channel