கொழும்பு:
லங்கை திரும்பும் கோத்தபய ராஜபக்சே பாதுகாப்பு வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்திதை அடுத்து, கோத்தபய ராஜபக்சே மாலதீவு வழியாக சிங்கப்பூருக்கும், பின்னர் அங்கிருந்து தாய்லாந்து நாட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்தது கோரிக்கை விடுத்துள்ளது. அதில், இலங்கை திரும்பும் கோத்தபய ராஜபக்சே பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில்,  கோத்தபய ராஜபக்சே, தனது மனைவி மற்றும் மகனுடன் அமெரிக்காவில் குடியேற கிரீன் காடுக்கு விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.