திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் குற்றவாளிகள் சிறையில் கடந்த மாதம் என்ஐஏ அதிகாரிகள் சோதனையிட்டு ஏராளமான செல்போன்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், இன்று திருச்சி மத்திய சிறையில் , மாநகர போலீசார்  திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ties with foreign drug gangs? Police raid at Trichy Central Jail ..திருச்சி மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் போலி பாஸ்போர்ட், போதைப்பொருள் கடத்தல் உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் ஜெயில் வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தண்டனை முடிந்தும் தங்களை வெளியே விடவில்லை என கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இங்குள்ளவர்களுக்கு பல்வேறு போதைப்பொருள் கும்பல் மற்றும் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதையடுத்து, கடந்த மாதம்,  என்ஐஏ அதிகாரிகள் மத்திய சிறையில் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது, சில முக்கிய ஆவணங்கள், 60க்கும் மேற்பட்ட செல்போன் களை பறிமுதல் செய்தனர். அதைக்கொண்டு ஆய்வு செய்து, பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மீண்டும் திருச்சி மத்திய சிறையில் மாநகர போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம் உட்பட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் சென்று சோதனை நடத்தினர். போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளனரா? என போலீசார் ஆய்வு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையில் 150 போலீசார் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி சென்ற நிலையில், தற்போது, திருச்சி மாநகர போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டது மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதி முகாமில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை…

போதைபொருள் விவகாரம்: சென்னை கேளம்பாக்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை…