டெல்லி: கட்டண பாக்கி வைத்துள்ள தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க தடை மத்தியஅரசின் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் தடை விதித்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார், உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகை செலுத்தவில்லை எனக்கூறி மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த  13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள நேற்று இரவு முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.  தமிழ்நாடு, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், ஜார்க்கண்ட், பீகார், ஜே&கே, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 13 மாநிலங்களும் சுமார் 5ஆயிரம் கோடி அளவில் மின்பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இநத் 13 மா மாநிலங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, மணிப்பூர், கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தடை பொருந்தும் என தகவல் வெளியாகியுள்ளது.  மின்கட்டமைப்பை நிர்வகிக்கும் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் முதல்முறையாக 13 மாநிலத்துக்கு எதிராக தெரிவித்துள்ளது. மத்தியஅரசின் இந்த நடவடிக்கையால், இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும்.