சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில், முதல்வர் தலைமையில் நடைபெற இருந்த துணைவேந்தர்கள் மாநாடு மற்றும் பாடத்திட்ட மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்து, மாநிலஅரசே புதிய கல்விக்கொள்கையை உருவாக்க முனைந்துள்ளது. மேலும, பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றுவதற்கான முனைப்பிலும் ஈடுபட்டு உள்ளது. இதுமட்டுமின்றி, மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்கம் வகையில் சட்டமசோதா நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது. அண்மையில் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், “காலத்திற்கேற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ள பொறியியல் பாடத்திட்டங்கள் விரைவில்வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த பாடத்திட்ட மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொன்முடி தெரிவித்துள்ளார்.
முதல் அமைச்சர் முக ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று மாலை டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார் .இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த பாடத்திட்ட மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் .மேலும் நாளை நடைபெறவிருந்த துணைவேந்தர்கள் கூட்டம் ஓத்த்திவைக்கப்பட்டுள்ளது , மாற்று தேதி விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்