சென்னை: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் புனிதஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினா். அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு தகைசால் தமிழர் விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழை முதலமைச்சர் வழங்கினார்.
நாட்டின் 76-வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் புனிதஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினா் முன்னதாக, இன்று காலை 8.35 மணிக்கு கோட்டை அருகில் வந்த முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலர் வெ.இறையன்பு வரவேற்று, காவல் துறை அதிகாரிகளை அறிமுகம் செய்துவைத்தார். சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில், தேசியக் கொடியேற்று விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சருக்கு முப்படைகளின் உயர் அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோரை தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்தார்.
சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில், சுதந்திரத் திருநாளையொட்டி நடைபெற்ற காவல்துறையின் அணிவகுப்பினை முதலமைச்சர் பார்வையிட்டார். அதையடுத்து சரியாக காலை, 9 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சுதந்திர தின விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு `தகைசால் தமிழர்’ விருது வழங்கினார். அதேபோல, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் ஆய்வுநிறுவனத்தின் இயக்குநர் ச.இஞ்ஞாசிமுத்துவுக்கு அப்துல் கலாம் விருது, நாகை மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்த எழிலரசிக்கு கல்பனா சாவ்லாவிருது, முதல்வரின் நல்லாளுமை விருதுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்த மாவட்ட ஆட்சியர், மருத்துவர், நிறுவனங்களுக்கும் விருதுகளை வழங்கினார். அத்துடன் முதல்வரின் இளைஞர் விருதுகள், கொரோனா தடுப்பு சிறப்பு பதக்கம், சிறந்த உள்ளாட்சி அமைப்புக்கான விருது, வீர தீர செயலுக்கான விருது உள்ளிட்டவற்றையும் முதல்வர் வழங்கி கவுரவித்தார்.
தகைசால் விருதுடன் வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்தோடு சேர்த்து ரூ.5 ஆயிரத்தையும் தன்னுடைய நிதியாக தமிழக அரசுக்கு வழங்கினார் நல்லகண்ணு. 2022-ஆம் ஆண்டிற்கான நல்லாளுமை விருதுகளையும் முதல்வர் வழங்கினார். இதன் பின் சுதந்திரத் தினத்தையொட்டி பல்வேறு விருதுகளை வழங்கினார் முதல்வர். அதில், தமிழக அரசு சார்பில் அப்துல் காலம் விருது முனைவர் ச.இஞ்ஞாசிமுத்துவுக்கு வழங்கப்பட்டது. ச.இஞ்ஞாசிமுத்து பாளையக்கோட்டை தூய சசேவியர் கல்லூரியில் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். நாகை கீழ்வேளூரை சேர்ந்த எழிலரசி என்பவருக்கு துணிவு, சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
குளத்தில் மூழ்கிய சிறார்களை காப்பாற்றிய செயலுக்காக எழிலரசிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. உங்கள் தொகுதியில் முதல்வர் விருது லட்சுமி ப்ரியாவுக்கு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்த உதகை அரசு மருத்துவமனை மருத்துவர் ஜெய்கணேசமூர்த்திக்கு விருது வழங்கப்பட்டது. அறிவுசார் குறைவுடையவர்களுக்கான சிறப்பு பள்ளியை செயல்படுத்தும் ரெனேசான்ஸ் அறக்கட்டளைக்கு விருது வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளி நலனுக்காக பணியாற்றிய அமுதசாந்திக்கு சிறந்த சமூக பணியாளர் விருது வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு மாற்றுத்திறனாளி நலனுக்கான விருது வழங்கப்பட்டது. தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சிக்கு முதலமைச்சர் விருது வழங்கினார். சிறந்த நகராட்சிகளில் ஸ்ரீவில்லுபுத்தூர் முதலிடமும், குடியாத்தம் இரண்டாவது இடமும், தென்காசி மூன்றாவது இடமும் பிடித்தது.
சேலம் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சமும், ஸ்ரீவில்லுபுத்தூர் நகராட்சிக்கு ரூ.15 லட்சமும், குடியாத்தம் நகராட்சிக்கு ரூ.10 லட்சம், தென்காசி நகராட்சிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு கருங்குழி பேரூராட்சிக்கு ரூ.10 லட்சமும், கன்னியாகுமரிக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டது. மேலும் முதலமைச்சரின் இளைஞர் விருது விஜயகுமார், முகமது ஆசிக், வேலூர் ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. நாகையை சேர்ந்த சிவரஞ்சனிக்கும் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் கலந்துரையாடிய முதல்வர், அவர்களுக்கு பரிசு வழங்கினார்.