மதுரை:
பாஜகவை விட்டு விலகுவதாக மதுரை பாஜக நிர்வாகி மருத்துவர் சரவணன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பாஜகவை விட்டு விலகுகிறேன். பாஜகவில் அரசியல் செய்ய விரும்பவில்லை மத அரசியலில் ஈடுபடுவதில் உடன்பாடு இல்லை என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசியது ஏற்கத்தக்கதல்ல என்றும், அண்ணன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் அவரது வீட்டிற்கு நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினேன் என்று கூறினார்.