டில்லி

ரசுக்கு நிலக்கரி ஊழலால் ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது

டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா மாநிலம் லோகாரா கிழக்கு நிலக்கரி சுரங்கத்தை கிரேஸ்  இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக  வழக்கு தொடரப்பட்டது.  அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, நிலக்கரி  சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாகப் புகார்  எழுந்தது. சிபிஐ விசாரணை நடத்தி பல்வேறு வழக்குகளைத் தாக்கல்  செய்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிலக்கரித்துறை முன்னாள்  செயலர் ஹெச்.சி.குப்தா, முன்னாள் இணைச் செயலர்  கே.எஸ்.குரோபா, நாக்பூரைச் சேர்ந்த கிரேஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும்  அதன் இயக்குநர் முகேஷ் குப்தா ஆகியோர் குற்றவாளிகள் என அறிவித்தது.  இவர்களுக்கு தலா ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை  கிடைக்கும் எனக்கூறப்படுகிறது.

இந்த வழக்கின் தண்டனை விபரங்கள் வரும் 8ம்  தேதி அறிவிக்க உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.  நிலக்கரி ஊழல்  வழக்குகளில்  இது11வது தீர்ப்பாகும்.  இதற்கு முன்பு நிலக்கரித்துறை முன்னாள் செயலரான  எச்.சி.குப்தா இதற்கு முன்னர் 3 நிலக்கரி ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.  வழக்கின் தண்டனைகளுக்கு எதிராக அவர் தாக்கல் செய்துள்ள  மேல்முறையீட்டு வழக்குகள் டில்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.  அவர் தற்போது அவர் ஜாமீனில் உள்ளார்.

தற்போதைய வழக்கு தொடர்பாக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், ”நிலக்கரி ஊழல் என்பது நாட்டின் மிகப்பெரிய ஊழல். எந்த நிறுவனமும் நிலக்கரி சுரங்கங்களைக் குத்தகைக்கு எடுக்க முன்வராததுதான்  இந்த ஊழலுக்கான காரணமாகும்.  நமது நாட்டில் அபரிவிதமாக கிடைக்கும் நிலக்கரியை நம்மால் எடுக்க  முடியாததால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியா,  ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்தியாவுக்கு வெளிநாட்டு நிலக்கரியை இறக்குமதி  செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உச்சநீதிமன்றம் இந்த ஊழல் காரணமாக 214 நிலக்கரி  சுரங்க ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அரசுக்கு 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு  ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.