சென்னை
தமிழகத்துக்கு 3000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின் வாரியம் டெண்டர் கோரி உள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மின்சார உற்பத்தி குறைந்து வருகிறது. எனவே தமிழகத்தில் தற்போது உற்பத்தியாகும் மின்சாரம் போதுமான அளவில் இல்லை. கடந்த மே மாதம் தொடங்கிய காற்றாலை சீசன் மழை காரணமாகச் சரி வரக் காற்று வீசவில்லை.
இவ்வாறு மின் பற்றாக்குறை ஏற்படும் போது மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வது வழக்கமாகும். வரும் கோடைக் காலத்தில் மின்சார பற்றாக்குறை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
எனவே செப்டம்பர் 30 முதல் நவம்பர் 15 வரை 24 மணி நேரமும் பயன்படுத்த கூடிய வகையில் 1000 மெகாவாட் மின்சார கொள்முதலுக்குத் தமிழக மின் வாரியம் டெண்டர் கோரி உள்ளது. மேலும் 2023 கோடைக் காலத்துக்காகவும் 200 மெகாவாட் மின்சார கொள்முதலுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.