சென்னை

மிழகத்தில் வரும் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தற்போது தமிழகத்தில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று, நாளை (ஆக. 2, மற்றும் 3)  ஆகிய இரு நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்யலாம்

மேலும், 4-ம் தேதி ஒரு சில இடங்களிலும், 5-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

இன்று அதாவது 2-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

அடுத்ததாக 3, 4-ம் தேதிகளிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது

என எச்சரிக்கப்பட்டுள்ளது.