டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், தற்போது சிகிச்சையில் 1,43,654 பேர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில், புதிதாக மேலும் 15,528 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரத்து 056 ஆக உயர்ந்தது.
கடந்த 24மணி நேரத்தில் மேலும் 25 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,785 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக cள்ளது.
நேற்று மட்டம் கொரோனா தொற்றில் இருந்து 16,113 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,31,13,623 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.47% ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,43,654 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.33% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 2,00,33,55,257 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 27,78,013 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.