கீவ்:
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 353 குழந்தைகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து உக்ரைன் வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த துவங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனில் 353 குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்றும் 662-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்டைந்துலல்னர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டான்ட்ஸ், கார்கிவ், கீவ், செர்னிஹிவ், லுஹான்ஸ்க், மய்கொலயிவ் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி, முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது,